tamilnadu

img

கொரோனா வைரசின் முழு மரபணு வரிசை இந்திய விஞ்ஞானிகள் வெற்றி

அகமதாபாத்,ஏப்.16- கொரோனா வைரசின் முழு மரபணுவையும் வரிசைப்படு த்துவதில் இந்திய விஞ்ஞானிகள் வெற்றியடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இந்தியாவில் திருப்புமுனையாக குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் (ஜிபிஆர்சி) விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளனர்.

வைரசின் தோற்றம், மருந்து இலக்குகள், தடுப்பூசி மற்றும் வைரசுடன் தொடர்பு கொள்வதில் முழு மரபணு வரிசை முக்கிய பங்கு வகிக்கும். ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் மரபணுவின் முழுமையான டி.என்.ஏ வரிசையை தீர்மானிக்க முழு-மரபணு வரிசைமுறை பயன்படுத்தப்படுகிறது.

குஜராத்தின் முதல்வர் அலுவலகம் இந்த விஞ்ஞானி களைப் பாராட்டியுள்ளது.  இந்தியாவில் உள்ள இரண்டு வகை வவ்வால்களில் கொரோனா வைரஸ்களை கண்டுபிடித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

;